மீனா கணவர் மரணம் .. இதயம் கணக்கிறது, வாழ்க்கை கொடுமையானது : குஷ்பூ ட்வீட்
பிரபல நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் தொற்றுக் காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார் ,தமிழ் சினிமாவின் நட்சத்திர கதாநாயாகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் வலம் வந்தவர் மீனா.
மீனாவின் கணவர் வித்யாசாகர்
இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.
நைனிகா அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான தெறி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நைனிகாவிற்கு தனது தாய் மீனாவை போலவே புகழை தேடி தந்தது.
நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வந்த நிலையில் மீனாவின் கணவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
கொரோனா தொற்றிலிருந்து குணமானாலும் அதன் பிறகு நுரையீரல் பிரச்சினைக் காரணமாக வித்யாசகர் சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மீனாவின் கணவர் நேற்று இரவு உயிரிழந்தார்.
குழப்பத்தை ஏற்படுத்திய மரணம்
இந்த நிலையில் மீனாவின் கணவர் கொரோனா தொற்றால் பலியானார் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் அவர் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்ததாக மீனாவின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது மீனாவின் கணவர் உயிரிழப்பிறகு திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
வேண்டுகோள் வைத்த குஷ்பு
அந்த வகையில் பாஜக ஆதரவாளரும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டர் பதிவில்: நடிகை மீனாவின் கணவர் சாகர் நம்மிடையே இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது. நீண்ட நாட்களாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார்.
மீனா மற்றும் அவரது மகளை நினைத்து இதயம் கணக்கிறது. வாழ்க்கை கொடுமையானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை , அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
I very humbly request the media to be little responsible. Meena's husband had covid 3 months back. Covid worsened his lung condition. Pls do not send out a wrong message & create any kind of fear or cause flutter by saying we lost Sagar to covid. Yes we need to cautious, but pls.
— KhushbuSundar (@khushsundar) June 29, 2022
அதே சமயம் ஊடகங்கள் கொஞ்சம் பொறுப்பாக இருக்க என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மீனாவின் கணவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு கோவிட் இருந்தது. கோவிட் அவரது நுரையீரல் நிலையை மோசமாக்கியது.
தயவு செய்து சாகர் கொரோனா தொற்றால் இறந்துவிட்டார் என்று தவறான செய்தியை பரப்பாதீர்கள் . எந்த வித பயத்தையும் அல்லது படபடப்பை ஏற்படுத்தாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதான் நடிகை மீனாவின் கணவர் இறப்புக்கு காரணமா? உறவினர்களின் அதிர்ச்சி தகவல்!