சவுக்கு சங்கருக்கு அரசின் ரகசியங்களை கூறிய பெண் எஸ்பி? பகீர் கிளப்பும் ஆடியோ!
சவுக்கு சங்கரிடம் பெண் எஸ்பி லாவண்யா பேசிய ஆடியோவை திருச்சி சூர்யா வெளியிட்டுள்ளார்.
அரசின் ரகசியங்கள்
திமுகவையும், தமிழக அரசையும் தனது யூடியூப் பக்கத்தின் மூலம் கடுமையாக விமர்சித்து வந்தவர் சவுக்கு சங்கர். இவருக்கு யாரோ அரசின் ரகசியங்களையும், காவல்துறை தொடர்பான ரகசியங்களையும் கூறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
இதில் ஒருகட்டத்தில் பெண் காவல்துறையினர் தொடர்பாக பேசிய புகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா தினந்தோறும் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சிறையில் உள்ள சவுக்கு சங்கரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லாவண்யாவும் பேசிய பழைய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்து லாவண்யா கூறுவது போல்பதிவாகியுள்ளது. மேலும் போலீஸ் எஸ்பியையே மிரட்டும் வகையில் சவுக்கு சங்கர் பேசுவதாக அமைந்துள்ளது.
அதில் எஸ்பி பேசும்போது போலீஸ் அதிகாரி அரவிந்துக்கும் உங்களுக்கும் எப்படி நட்பு என எனக்கு தெரியாது என கூறுகிறார். அதற்கு எதிர் தரப்பில் சவுக்கு சங்கர் ஆவேசமாக கத்துகிறார். இதற்கு எஸ்பி எனக்கு சசிகாந்த் சார் எல்லாம் நன்றாக தெரியும்.
பகீர் ஆடியோ
உங்களை போல் ஆட்கள் இந்த சமுதாயத்திற்கு தேவை, உண்மை என்றால் உண்மை என பேசுபவர்கள். தப்புனா தப்புன்னு சொல்பவர்கள் என கூறுகிறார். அரவிந்து தொடர்பாக பேசும் போது அதற்கு லாவண்யா எஸ்பி ரொம்ப விஷமானர் என கூறினார். மேலும் அனிதா ஏடிஎஸ்பி என்பவர் உண்மையாகவே வேலுமணிக்கு எல்லாம் செய்கிறார்.
உங்கள் தொடர்பில் விசாரியுங்கள். அனிதா ஏடிஎஸ்பி என பிரிச்சு எடுத்துவிடுவாங்க, அனிதா தொடர்பாக யாருக்கு வெண்டும் என்றாலும் போன் செய்து பாருங்கள். அவரை பற்றி விசாரியுங்கள், உங்களுக்கு தேவையென்றால் கூடுதல் தகவல் தருகிறேன் என சொல்கிறார். அவர்களையெல்லாம் விட்டு விடுகிறீர்கள்.
இன்னும் விஜிலென்ஸ் ஏடிஎஸ்பி சீனிவாச பெருமாள் இருக்கிறார் என கூறுகிறார், அவரைப்பற்றி தகவலை சொல்லுங்கள் என சவுக்கு சங்கர் கேட்கும் போது சீனிவாச பெருமாள் ஓபிஎஸ் ஆளு சொல்லுவாரு, எங்க பேட்ஜ் தான் என எஸ்பி லாவண்யா பேசிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு...
— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) July 19, 2024
சமீபத்தில் ஆட்சிக்கு எதிராக அதிக அவதூறுகளும் அவப்பெயர்களும் உருவாக்கப்படுகின்றன.
இதற்கு காரணம்,அரசாங்க அதிகாரிகள் சிலர் @annamalai_k , @SeemanOfficial @SavukkuOfficial இவர்களை போன்ற அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும்… pic.twitter.com/Hf43HRQyaa