கஞ்சா வழக்கு...தானாக ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற சவுக்கு சங்கர் - எதனால் தெரியுமா?
கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை சவுக்கு சங்கர் வாபஸ் பெற்றுள்ளார்.
சவுக்கு சங்கர்
யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே 4ம் தேதி தேனியில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராஜரத்தினம், ராம்பிரபு மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீதும் பழனிசெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வாபஸ்
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்று வந்த நிலையில், சவுக்கு சங்கர் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார். இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கூடாது என குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவையை சார்ந்த பாவணி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவையும் நீதிபதி விசாரணைக்கு ஏற்றுள்ளார்.
இதனால் இந்த மனு மீதான விசாரணையில் ஜாமீன் வழங்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவே தகவல் வெளியானது. இதனால் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்று விடலாம் என எண்ணி சவுக்கு சங்கர் தன் ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டாக தகவல் வெளியாகி உள்ளது.