விஜய்யை கட்டின மனைவியுடன் வெளியே வர சொல்லுங்க.. ஏன் ஆடம்பரம் - தாக்கிய பிரபலம்
விஜய் மீது திருச்சி சூர்யா சரமாரி விமர்சங்களை வைத்துள்ளார்.
களத்தில் தவெக
கோவையில் தவெக தலைவர் ரோடு ஷோ நடத்தியதை போலவே, உதயநிதியும் ரோடு ஷோவில் ஈடுபட்டார். இதன்காரணமாக திமுகவின் கட்சிக் கொடியை சேதப்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேட்டி அளித்துள்ள திருச்சி சூர்யா, "பூத் கமிட்டி போடுவது என்பது அனைத்து கட்சியிலும் கட்டமைப்பு போடுவதற்கான இயல்பான விஷயம். ஆனால், விஜய் கட்சியில் கட்டமைப்பு இருக்கிறதா? என்பது கேள்விக்குறியே..
தமிழகத்தை பொறுத்தவரை பூத் கமிட்டி அளவில் மிகவும் வலுவாக இருப்பது, திமுக, அதிமுக, விசிக மட்டும்தான்.. வேறு கட்சிகளிடமும் கிடையாது. தன்னை வேடிக்கை பார்க்க வரும் ரசிகர்கள் செய்யும் ஆரவாரத்தை வைத்தே, பூத் கமிட்டி போட்டுட்டாரு, கட்சியை நிப்பாட்டிட்டாரு, வேட்பாளர்கள் தயார். மக்களின் ஆதரவும் தயார்.
திருச்சி சூர்யா விமர்சனம்
விஜய் ஆட்சி அமைக்க போகிறார் என்ற பிம்பத்தை ஊடகங்கள் வேண்டுமானால் கட்டமைக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் எல்லாமே தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும். இப்போது பூத் கமிட்டி கூட்டத்தில், 4 நிமிஷம் மட்டுமே பேசியிருக்கிறார். விஜய் வாயில் தமிழும் வரல, உச்சரிப்பும் இல்லை.. கொள்கையும் பேசத்தெரியல.. வரலாறும் பேசத்தெரியல.
கமலுக்கும் கூட்டம் கூடியது. குஷ்புவுக்கும் கூட்டம் கூடியது. வடிவேலுவுக்கும் கூட்டம் கூடியது. இவர்கள் எல்லாம் அரசியலில் என்ன சாதித்தார்கள்? அதுபோல் விஜய் இறங்கி வரணும். எதுக்கு இவ்வளவு ஆடம்பரம்? மக்களாட்சி தரும் தலைவருக்கு கோவை போறதுக்கு 50 லட்சமா? இன்று வேடிக்கை பார்க்க வரும் கூட்டம் முழுவதும் வாக்காக மாறுமா? என்பதுதான் கேள்வி.
விஜய்யால் மாலை 6 மணிக்கு மேல வெளியே வர முடியாது. 6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது. அதுக்கான ரகசியம் என்ன? கோவை பூத் கமிட்டி விழாவும் 6 மணிக்கு முன்பே முடிந்துவிட்டது. எனவே, இரவு நேரத்திலும் மக்கள் கட்சி கூட்டத்திலும் பங்கேற்க விஜய் வெளியே வரவேண்டும். ஆனால், அவர் மாட்டார்.
இதை நான் சவால் விட்டு சொல்கிறேன். அதேபோல, தன்னுடைய மனைவியுடன் கைகோர்த்து வெளியே வர சொல்லுங்க. கட்சி நிகழ்வுக்குகூட வேணாம், பொது நிகழ்ச்சிகளுககு வர சொல்லுங்க. மோடியை மட்டும் எல்லாரும் கேட்கறீங்க? என்று தெரிவித்துள்ளார்.