சுயமரியாதை முக்கியம் - இனியும் முடியாது !! நீக்கப்பட்ட திருச்சி சூர்யா உறுதி!!

Tamil nadu BJP K. Annamalai Trichy Suriya Shiva
By Karthick Jun 20, 2024 06:04 AM GMT
Report

தமிழக பாஜக கடந்த சில நாட்களில் சில நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது.

தமிழக பாஜக

தமிழ்நாடு அரசியல் களத்தில் கடந்த சில வருடங்களாக வேகமெடுக்கும் கட்சியாக உள்ளது பாஜக. குறிப்பாக, அண்ணாமலை தலைமை பொறுப்பேற்ற பிறகு, கட்சி வளர்ச்சி கணிசமான வகையில் உள்ளது.

tamil nadu bjp

அதுவே சில பிரச்சனைகளையும் கிளப்பிவிட்டது. அண்ணாமலைக்கேன ஆதரவாளர்களை உருவான நிலையில், மூத்த தலைவரான தமிழிசை பேசிய கருத்திற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வந்தன.

அதே நேரத்தில், தமிழிசையை நேரில் சந்தித்து பேசினார் அண்ணாமலை. பிரச்சனை தணிந்ததாகவே இருந்த நிலையில் தான் நேற்று, தமிழிசை தேசிய தலைமையிடம் இது தொடர்பாக புகார் அளித்ததாக தகவலும் வெளியாகின.

Trichy Suriya Annamalai

நடைபெற்ற கட்சி கூட்டத்திலும் தமிழிசை இது தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தான், அதிரடியாக கட்சியில் இருந்து சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா ஆகியோர் கட்சியின் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் தலை தூக்கும் பாஜக உட்கட்சி பூசல் - டெல்லியில் புகார் சொன்ன தமிழிசை!!

மீண்டும் தலை தூக்கும் பாஜக உட்கட்சி பூசல் - டெல்லியில் புகார் சொன்ன தமிழிசை!!

கல்யாணராமன் ஒரு வருடத்திற்கு நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில் திருச்சி சூர்யா நீக்கப்படுவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

சுயமரியாதை...

கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சி சூர்யா அண்மையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன், அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். எந்த நிலையிலும் அண்ணன் அண்ணாமலை குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன்.

இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. என் மீது அன்பு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்.