மீண்டும் தலை தூக்கும் பாஜக உட்கட்சி பூசல் - டெல்லியில் புகார் சொன்ன தமிழிசை!!
தமிழக பாஜகவில் சில நாட்களை முன்பு வரை உட்கட்சி பூசல் இருந்ததாக பல செய்திகள் வெளியாகின.
தமிழிசை அண்ணாமலை
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக இருந்த தமிழிசை, அப்பதவியை ராஜினாமா செய்து, மக்களவை தேர்தலை தென் சென்னையில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக அமையவில்லை.
கட்சியில் இருந்து ஆளுநராக தமிழிசை சென்ற போது, கட்சியின் தலைவராக இருந்த அண்ணாமலை, மாநிலத்திலும் கட்சிக்குள்ளும் அபரிவிதமான வளர்ச்சியை பெற்றார். அவருக்கென தனி ஆதரவாளர்கள் கட்சிக்குள்ளே உருவானார்கள்.
வார் ரூம் குறித்து தமிழிசை வெளிப்படையாக விமர்சிக்க அதற்கு பதிலளிக்கும் விதமாக, திருச்சி சூர்யா விமர்சனத்தை தமிழிசை மீது வைத்திருந்தார்.
புகார்
அவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர். அண்ணாமலை தான் வார் ரூம் நடத்துவதாக பேசுகிறார்கள். ஆகவே, கட்சிக்குள் உட்கட்சி பூசல் மூண்டுவிட்டதாக பல செய்திகள் வெளிவர துவங்கின.
ஆனால், தமிழிசையை அவரின் வீட்டிலேயே சந்தித்து பேசினார் அண்ணாமலை. பிரச்சனை முடிவிற்கு வந்தவிட்டதாக கூறப்பட்டது. ஆனால், வேறு விதமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது, பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்பாக கட்சியின் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் தமிழிசை புகார் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடைபெற்று வரும் பாஜக மைய குழு மீட்டிங்கில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக தெரிகிறது.