47 ஆண்டுகளுக்கு பின்.. 1 மணி நேரம்தான்; திருச்சி - இலங்கை விமான சேவை
திருச்சி- இலங்கை யாழ்ப்பாணம் இடையே விமான சேவை தொடங்கியுள்ளது.
திருச்சி- இலங்கை
கடந்த 2019-ம் ஆண்டு யாழ்ப்பாணம் விமானம், விமான சேவைகளுக்காக திறக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகள் விமானம் இயக்கப்பட்டன.
கொரோனாவுக்கு பின் சென்னை- யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு நாள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் யாழ்ப்பாணத்துக்கு விமான சேவைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
விமான சேவை
திருச்சியில் இருந்து பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் விமானம் ஒரே ஒரு மணிநேரத்தில் பிற்பகல் 2.25 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4.05 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும்.
இண்டிகோ நிறுவனம் மூலம் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த விமான சேவை இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல மட்டும் ரூ5,900 முதல் ரூ6,400 வரை விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.