இலங்கை செல்லும் பிரதமர்: புதிய பாம்பன் பாலம் திறப்பு எப்போது?
புதிய பாம்பன் பாலம் திறப்பு தேதி தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட பழைய ரயில்வே தூக்கு பாலம் சேதமடைந்தது.இதன் காரணமாக பாம்பன் கடலில், 550 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் தற்பொழுது 100 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.இதனை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏப்ரல் 6 ஆம் தேதி பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.மேலும் ராம நவமியை ஒட்டி, ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக ஏப்ரல் 5 ஆம் தேதி பிரதமர் மோடி, இலங்கை சென்ற பிறகு அங்கிருந்து நேராக ராமேஸ்வரம் வர இருப்பதாக கூறப்படுகிறது.