திருச்சி சிவாவின் மகன் சூர்யாவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கிய பாஜக...!
சமீபத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், தற்போது பாஜகவில் சூர்யாவிற்கு முக்கிய பொறுப்புவழங்கப்பட்டுள்ளது.
திமுகவிலிருந்து விலகல்
கடந்த மாதம் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா சில அதிருப்தி காரணமாக திமுகவிலிருந்து விலகினார். இதனையடுத்து, அவர் பாஜகவில் இணைந்து கொண்டார். அவர் இணைந்தபோது சூர்யாவிற்கு மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று பாஜக சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, சொன்னமாதிரியே தற்போது பாஜகவின் ஓபிசி பிரிவில் மாநில பொதுச் செயலாளராக சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய பொறுப்பு
திமுகவில் விலகி பாஜகவில் சூர்யா இணைந்த போது, நாங்கள் பெரிய தலைவரின் மகனை எங்கள் கட்சிக்குள் கொண்டு வந்துட்டோம் என்று பெருமிதம் கொண்டனர் பாஜகவினர்.
சூர்யாவுக்கு இந்த பொறுப்பு வழங்கியதற்கு ஒரு காரணமும் உள்ளது. கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் அதிகம் கிடைக்கவில்லை. இதை சரி செய்ய, அந்த வாக்குகளை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள திட்டமிட்டது.
அதன்படியே, முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த சூர்யாவிற்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.