பாவாடை, கிறிஸ்தவ கைக்கூலி வார்த்தைகளை யார் பயன்படுத்துறாங்க? திருச்சி சிவா மகன் ஆதங்கம்..!
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபா உறுப்பினரும் மான திருச்சி சிவாவின் மகன் சூர்யா இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
ஏன் இந்த விலகல்?ஏன் இந்த தாவல் என்ற கேள்விகளை முன் வைத்தது ஐபிசி தமிழ் நேர்காணல் இதுக்கு பதிலளித்த அவர் சில முக்கிய கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
திமுக சரியான பாதையில் பயணிக்கவில்லை,ஆனால் பாஜகவில் எனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.
திமுகவில் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் உழைத்தால் அது இளவு காத்த கிளி போல போயிடுமோ என்ற சூழல் தான் இருக்கிறது என்றார்.
திமுக கட்சிக்கு வரக்கூடிய புது முகங்கங்களை அங்கீகரிப்பதாகவும்,பாரம்பரியத்தில் இருந்து கட்சியில் இருக்க கூடியவர்கள் வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.