மத்திய அரசு ஓரவஞ்சனை - வெள்ள பாதிப்பிற்கு நிதி ஒதுக்காமல் - திருச்சி சிவா குற்றச்சாட்டு..!!
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் ஓரவஞ்சனை காட்டுவதாக திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
வெள்ள பாதிப்பு
தென்தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற 4 மாவட்டங்களில் பெய்த கனமழை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல மக்களின் உடமைகள் முதல் வீடு வரை மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த வருந்ததக செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே தான் இருக்கின்றது.
முதலில் மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசும் தீவிரமாக மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பாதிப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஓரவஞ்சனை செய்கிறது
அப்போது பாதிப்பில் இருந்து மீண்டெழ மொத்தமாக 12,659 கோடி ரூபாய் நிவாரண நிதியாக கோரப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், குஜராத்தில் ஏதாவது பிரச்சினை என்றால், அள்ளிக் கொடுக்கும் அரசு, தமிழகத்துக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை காட்டுகிறது என்று கூறி, தமிழக மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.
தமிழக அரசு வெள்ளம் பாதித்த அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை செலவழிக்கிறது என்று சுட்டிக்காட்டிய அவர், ஆனால், ஒரு மாநில அரசு இடர்பாடுகளில் இருக்கும்போது, உதவிக்கரம் நீட்ட வேண்டிய மத்திய அரசு தங்களுடை எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களை எல்லாம் வஞ்சிக்கிறது என்று சாடினார்.
மக்கள் வாடி தேவைகளால் தடுமாறுகிற போதும் உதவி செய்தும் உறுதுணையாகவும் இல்லாமல் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்று தெரிவித்த திருச்சி சிவா, இவ்வளவு மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளபோது, தமிழக அரசு கோரிய நிதியில் இருந்து ஒருபகுதியைக்கூட கொடுக்காமல் ரூ.492 கோடி கொடுத்துள்ள மத்திய அரசு அதே நேரத்தில் குஜராத்தில் ஏதாவது பாதிப்பு ஆயிரம் கோடி கொடுக்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.