வெள்ள பாதிப்புகள் - 12 ஆயிரம் கோடி நிவாரண நிதியாக கோரினார் முதல்வர்..!!

M K Stalin Tamil nadu DMK Narendra Modi
By Karthick Dec 20, 2023 06:23 AM GMT
Report

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தென்தமிழக மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறித்து எடுத்துரைத்தார்.

ஊர் சுத்தி பார்க்கவா வந்தேன்..? தூத்துக்குடியில் திடீரென ஆவேசமான உதயநிதி..!!

ஊர் சுத்தி பார்க்கவா வந்தேன்..? தூத்துக்குடியில் திடீரென ஆவேசமான உதயநிதி..!!

முதல்வர் - பிரதமர் சந்திப்பு

தென்மாவட்டங்களில் இடைவிடாது பெய்த மழையினால் பெரும் பாதிப்புகளை அப்பகுதிகள் சந்தித்துள்ளன. இந்நிலையில், மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் பாதிப்புகளை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

12k-crore-quoted-for-flood-relief-in-cm-pm-meeting

இந்த சந்திப்பு குறித்துதமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலையைப் பற்றி எடுத்துரைத்தேன்.

12,659 கோடி கோரிக்கை

நடைபெற்று வரும் மீட்புப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும், முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி வேண்டி கோரிக்கை மனுவை அளித்தேன். இத்தகைய கடினமான காலத்தில் தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிந்தமைக்குப் பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

12k-crore-quoted-for-flood-relief-in-cm-pm-meeting

வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசிடம் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2000 கோடியை தென்மாவட்ட பாதிப்புகளை சீரமைக்க உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக குறிப்பிடப்பட்டு, 100 ஆண்டுகளில் இல்லாத வகையிலான பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என் பிரதமரிடம் முதல்வர் முக ஸ்டாலின் கேட்டுக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புற வட்டாரங்களில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எடுத்துரைத்து, தற்காலிக நிவாரண தொகையாக ரூ.7033 கோடியும், நிரந்தர நிவாரண தொகையாக ரூ.12,659 கோடியும் விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.