திருச்சி தொகுதியில் மதிமுக..? கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவு..?
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதியை ஒதுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதிமுக - திமுக கூட்டணி
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது. அதே போல, அக்கட்சி ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டது.
மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இருந்து வரும் வைகோவும், ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியை உறுதிப்படுத்திய மதிமுக'வுடன் இன்று கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக நடத்தியுள்ளது. மதிமுகவின் சார்பில் அர்ஜுனராஜா, செந்திலதிபன் போன்றோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
அப்போது வரும் தேர்தலில் திருச்சி, விருதுநகர் போன்ற தொகுதிகளை, ஒரு மாநிலங்களவை தொகுதியையும் மதிமுக கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது, திமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தங்கள் சின்னத்தில் போட்டியிடுவோம் என பேச்சுவார்த்தை முடிந்த பிறகு மதிமுகவின் அர்ஜுனராஜா தெரிவித்துள்ளார்.
மதிமுகவின் சின்னம் பம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.