மது கொடுத்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..வீடியோவை பகிர்ந்து கொடூரம்!
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து பகிர்ந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
திருச்சி, அந்தரப்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(21). இவர் 16 வயது பள்ளி சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அவரைக் காதலிப்பது போல் நடித்து காவிரி கரையோரத்தில் உள்ள காட்டுக்கு தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அப்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து அவரை மயக்க நிலையில் ஆழ்த்தி, சிறுகாம்பூரைச் சேர்ந்த தனது நண்பர்கள் மணிகண்டன் (27) கணேஷ் (24) உள்பட ஐந்து பேருக்கு போன் செய்து அங்கு அனைவரையும் வரவழைத்துள்ளார்.
குழந்தை திருமணம்
தொடர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை தங்கள் செல்ஃபோனில் வீடியோ பதிவும் செய்துள்ளனர். மேலும், இதுபற்றி வெளியே சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர்.
தொடர்ந்து சிறுமியை அழைத்துச்சென்று மேலும் மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் அவர் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததாக படிப்பை நிறுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
வழக்குப்பதிவு
இதைத்தொடர்ந்து குழந்தை திருமணம் குறித்து தகவல் அறிந்த சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர்கள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து படிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கிடையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ சமூக வலதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இதனை கண்ட பெற்றோர் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படியில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்த நிலையில் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.