திருச்சியில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் - ஓட்டுநர் செயலால் கதறிய பயணிகள்!

Tamil nadu Fire Accident trichy
By Vidhya Senthil Aug 23, 2024 05:14 AM GMT
Report

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 தனியார்  பேருந்து

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருந்து செந்தூர் வேலன் என்ற தனியார் சொகுசு பேருந்து சென்னை நோக்கி 27 பயணிகளுடன் சென்றுள்ளது.

திருச்சியில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் - ஓட்டுநர் செயலால் கதறிய பயணிகள்! | Trichy Private Bus Catches Fire Driver Acts

இந்தப் பேருந்து திருச்சியில் உள்ள மன்னார்புரம் மேம்பாலத்தினை அதிகாலை சுமார் 02.10 மணிக்குக் கடந்தபோது, எதிர்பாராத விதமாகப் பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து. இதனால் பேருந்தின் பின்பகுதியில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

தனியார் நிறுவன மருந்து கிடங்கில் பயங்கர தீ விபத்து - 3 வாகனங்கள் எரிந்து சேதம்

தனியார் நிறுவன மருந்து கிடங்கில் பயங்கர தீ விபத்து - 3 வாகனங்கள் எரிந்து சேதம்

 தீவிபத்து 

இதனை அறிந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக மேம்பாலத்தின் மீது நிறுத்திவிட்டு அதில் பயணம் செய்த 27 பயணிகளையும் பத்திரமாகக் கீழே இறக்கிய சற்று நேரத்தில் தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

திருச்சியில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் - ஓட்டுநர் செயலால் கதறிய பயணிகள்! | Trichy Private Bus Catches Fire Driver Acts

இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பேருந்தின் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுவதுமாக தீக்கிரையாக்கியது.

இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.