ரயிலில் ஆண்கள் செய்த செயல் - அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட பெண்!
ரயிலில் ஆண்கள் செய்த அட்டூழியத்தை பெண் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
மெமு ரயில்
மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு நாள்தோறும் மெமு ரயில் செல்கிறது. இதில் மகளிருக்கான பெட்டிகளும் இடம்பெற்றுள்ளது.
இந்த பெட்டியில், விதிமுறைகளை மீறி பயணிக்கும் இளைஞர்கள் சிலர், சீட்டு விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆண்கள் அட்டூழியம்
மேலும், மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணித்ததால் பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதாகவும், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் அவதியடைவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோவை பயணி ஒருவர், வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வதற்கு ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் பயணி கோரிக்கை விடுத்துள்ளார்.