மொத்த கிராமத்திற்கும் இப்படியொரு கால்களா? தீக்கோழி மனிதர்கள் - திகைக்க வைக்கும் தகவல்!
ஒவ்வொரு நான்காவது குழந்தையும் வித்தியாசமான கால் அமைப்புகளைக் கொண்டுள்ளனர்.
நெருப்புக்கோழி
ஜிம்பாப்வே நாட்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களின் முகம் மனிதர்களைப் போல இருக்கிறது. ஆனால் அவர்களின் கால்கள் நெருப்புக்கோழியின் கால்களைப் போல உள்ளது.

இவர்களுக்கு காலில் இரண்டு அல்லது மூன்று விரல்கள் மட்டுமே இருக்கிறது. இவர்கள் வாடோமா அல்லது பாண்ட்வானா பழங்குடியினர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
அதிசயம் ஆனால் உண்மை
மேலும், நெருப்புக்கோழி மக்கள் என அழைக்கப்படுகின்றனர். கன்யெம்பா பகுதியில் வசிக்கின்றனர். முழு சமூகமும் Ectrodactyly எனப்படும் ஒரு சிறப்பு மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டோமா பழங்குடியினரின் ஒவ்வொரு நான்காவது குழந்தைக்கும் இந்த பிரச்சனை இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்தப் பழங்குடியின மக்கள் வேறு சமூகத்தில் திருமணம் செய்துகொள்வதை விரும்புவதில்லை. ஏனெனில் இரட்டை விரல்களுடன் பிறப்பதை அவர்கள் வரமாக நினைக்கிறார்கள். இவர்களால் சரியாக நடக்கவோ, காலணிகள் அணியவோ முடியாது.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan