கணவனை இழந்த பெண்ணுடன் தொடர்பு - நபரை நிர்வாணப்படுத்தி கும்பல் செய்த காரியம்!
பெண்ணுடன் தொடர்பில் இருந்த நபரை கும்பல் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணுடன்..
அலிராஜ்பூர் மாவட்டம் மால்பூர் கிராமத்தில் கடந்த 14ம் தேதி இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. விதவை பெண்ணுடன் பழங்குடியின நபர் தொடர்பில் இருப்பதை அறிந்த கிராமத்தினர் அவரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர்.
தாக்கியபோது தடுக்க முயன்ற விதவை பெண்ணையும் கிராம மக்கள் அடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு கிராம மக்கள் யாரும் எந்தவித உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது.
நபர்
பாதிக்கப்பட்ட பழங்குடியின நபர் தான் அப்பெண்ணுக்கு ஆதரவு கொடுத்து அவளது குழந்தைகளை வளர்க்க உதவி செய்துள்ளார். இந்த நிலையில், இதனை அறிந்த கிராம மக்கள் அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக,
அந்நபரை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த சம்பவமறிந்து வந்த போலீசார் த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.