பள்ளி ஆசிரியர் முதல் போலீஸ் வரை.. சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!
பழங்குடியின சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலம், பாரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் பள்ளிக்கு நீண்ட தூரம் செல்லும் நிலை இருந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி பள்ளி ஆசிரியர் ஒருவர் சிறுமியிடம், தான் வந்து வீட்டில் விடுவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி, ஆசிரியருடன் சென்றுள்ளார். ஆனால், ஆசிரியர் சிறுமியை அவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் வேறு ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த வீட்டில் பள்ளி முதல்வர், சக ஆசிரியர் ஒருவர் மற்றும் வனப்பாதுகாவலர் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, வலுக்கட்டாயமாக 4 பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளனர்.
பழங்குடியின சிறுமி
இதுபற்றி யாரிடமாவது கூறினால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, கடந்த 22ஆம் தேதி கடைக்கு வந்த சிறுமியை, மீண்டும் மிரட்டி அதே வீட்டிற்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் மனமுடைந்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ரவேந்திர குஷ்வாஹா, பள்ளி ஆசிரியர்கள் குஷால் சிங் பரிஹர், அசோக் குஷ்வாஹா, மற்றும் வனப் பாதுகாவலர் பன்வாரி சிங் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.