டீயுடன் பிஸ்கெட் சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
டீயுடன் பிஸ்கெட் நனைத்துச் சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டீ -பிஸ்கெட்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டையைச் சேர்த்தவர் ஹரி கிருஷ்ணன் - அமுலு தம்பதியினர் . இந்த தம்பதிக்கு 3 வயதில் வெங்கடலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த குழந்தைக்குத் தாய் அமுலு, டீயுடன் பிஸ்கெட்டை தோய்த்து ஊட்டியுள்ளார்.அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்து பதறிய அமுலு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
குழந்தை
அப்போது குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர் .இதனைக் கேட்ட குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது .

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan