ட்ரெண்டிங் பீர் ஸ்பா.. அப்படி என்றால் என்ன? ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

India World Social Media
By Swetha Jul 27, 2024 12:18 PM GMT
Report

பீர் குளியலால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காணலாம்.

 பீர் ஸ்பா..

'பீர் ஸ்பா' என்ற ஆரோக்கிய செயல்முறை உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அதாவது, பீர் நிரப்பப்பட்ட ஒரு தொட்டியில் மூழ்கி, மால்ட், ஈஸ்ட் மற்றும் ஹாப்ஸின் அனைத்து நன்மைகளிலும் உங்கள் உடலை ஊறவைப்பது தான் பீர் ஸ்பா ஆகும்.

ட்ரெண்டிங் பீர் ஸ்பா.. அப்படி என்றால் என்ன? ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க! | Trending Beer Spa What Is The Wellness In This

செக் குடியரசின் பராகுவே நகரில் செயல்படும் ஸ்பா பீர்லேண்ட் என்ற நிறுவனம் உலகின் மிகப்பெரிய பீர் ஸ்பாவாக கருதப்படுகிறது. ஸ்பா பீர்லேண்டின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில், பீர் ஸ்பா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் பீர் குளியல் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நமது பல நோய்களுக்கு ப்ரூவரின் ஈஸ்ட்டை பரிந்துரைத்தனர். இது பீர் உற்பத்தியின் துணை தயாரிப்பு மற்றும் பண்டைய காலங்களிலிருந்து மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் டாஸ்மாக் கடைகளில் 100% வீட் பீர் - விலை எவ்வளவு தெரியுமா?

விரைவில் டாஸ்மாக் கடைகளில் 100% வீட் பீர் - விலை எவ்வளவு தெரியுமா?

நன்மைகள் 

பீர் ஸ்பாவால் சருமத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து தோல் மருத்துவர் டாக்டர் ரூபன் பாசின் பாஸ்சி விளக்கினார். அப்போது பேசிய அவர், பீர் குளியல் என்பது அசாதாரணமானதாகத் தோன்றினாலும், அது சருமத்திற்கு ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.

ட்ரெண்டிங் பீர் ஸ்பா.. அப்படி என்றால் என்ன? ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க! | Trending Beer Spa What Is The Wellness In This

மேலும் "பீர் மால்ட், ஈஸ்ட் மற்றும் ஹாப்ஸ் ஆகியவற்றுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்களில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும் தாதுக்கள் உள்ளன. ஹாப்ஸில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்திற்கு ஒரு கவசமாக வேலை செய்யலாம்.

வயதான செயல்முறையை மெதுவாக்கலாம், பீரின் இயற்கையான அமிலங்கள் கூட மிதமான எக்ஸ்ஃபோலியண்ட்களாக வேலை செய்து இறந்த சரும செல்களை அகற்றி, மென்மையான, அதிக ஒளிரும் சருமத்தை ஊக்குவிக்கும். நீங்கள் இளமையாக மாறலாம்”என்றார்.

ட்ரெண்டிங் பீர் ஸ்பா.. அப்படி என்றால் என்ன? ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிஞ்சிக்கோங்க! | Trending Beer Spa What Is The Wellness In This

பீர் குளியல் பல நன்மைகளை அளித்தாலும், அதனால் ஏற்படும் அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக பீர் குளியால் ஒவ்வாமை ஏற்படலாம். இதுபோன்ற சென்சிடிவ் தோல் உங்களுக்கும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். இந்தியாவில் இன்னும் இந்த பீர் ஸ்பா ட்ரெண்டாகவில்லை.