ஒரே இரவு மட்டும் தான்.. அண்டை மாநிலங்களிலும் திருநங்கைகள் நிலை இதுதான்!
திருநங்கைகள் திருமண ரகசியம் குறித்து தெரியுமா?
திருநங்கைகள்
இந்தியாவில், திருநங்கைகள 'ஹிஜ்ரா' என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த மக்கள் தங்கள் சொந்த சமூகத்தை உருவாக்கி, உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
திருநங்கைகள், திரளாக கூடி கொண்டாடும் விழாவாக கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா உள்ளது. அவர்களின் குல தெய்வமாக கருதுகின்றனர்.
திருமணம்
ஆண்டுதோறும் அரவானை வழிபட டெல்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா, பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்திற்கு தருவார்கள். கோவிலின் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட பிறகு தங்கள் கணவனான அரவானை நினைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
விடிய விடிய கும்மியடித்து ஆட்டமும், பாட்டமுமாக இருப்பார்கள். அரவான் களப்பலி கொடுக்கப்பட்டவுடன், திருநங்கைகளின் கையிலிருக்கும் வளையல்களை உடைத்து நொறுக்கி கழுத்தில் அணிந்திருக்கும் தாலிகளை கழற்றி விதவை கோலத்துடன் வீடு திரும்புவார்கள், அவர்களது திருமண நிகழ்வு ஒரு இரவு மட்டுமே நிலைத்திருக்கும்.
பல மேற்கத்திய நாடுகளில், திருநங்கைகள் சாதாரண மக்களிடையே அவர்களைப் போலவே தங்கள் வாழ்க்கையையும் வாழ்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையையும் தத்தெடுக்க முடியும்.
ஆனால், இந்தியாவை போல பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளிலும் அவர்களின் நிலை மோசமாக உள்ளது. சமூகத்திலிருந்தே பிரிந்தே வாழ்கின்றனர்.