திருநங்கைகளை பெண்களாக கருதமுடியாது; அது சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம்

United Kingdom Transgender
By Sumathi Apr 17, 2025 10:39 AM GMT
Report

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 தனி பாலினம் 

இங்கிலாந்தில் திருநங்கைகளுக்கு சட்டபூர்வமாக கடந்த 2010-ம் ஆண்டு அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

england

ஆனால் அவர்களை தனி பாலினம் என வரையறுக்காமல் ஆண் அல்லது பெண் என 2 இனங்களில் ஏதாவது ஒரு இனத்தில் தன்னை இணைத்து கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து திருநங்கைகள் தங்களை பெண்கள் என அடையாளப்படுத்தி கொண்டு பாலின அங்கீகாரச் சான்றிதழை பெற்று கொண்டு வந்தனர்.

மியான்மர் நிலநடுக்கத்தை முன்னமே கணித்த பாபா வாங்கா - ஜூலையில் பயங்கர சுனாமி

மியான்மர் நிலநடுக்கத்தை முன்னமே கணித்த பாபா வாங்கா - ஜூலையில் பயங்கர சுனாமி

நீதிமன்ற தீர்ப்பு

இதனால் ராணுவம், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்டவற்றில் தங்களுக்கு ஒதுக்கப்படும் இடஒதுக்கீட்டில் திருநங்கைகள் ஆக்கிரமிப்பு செய்வதாக பெண்கள் போராட்டம் நடத்தினர்.

திருநங்கைகளை பெண்களாக கருதமுடியாது; அது சட்டவிரோதம் - உச்சநீதிமன்றம் | Transgenders Cannot Be Defined As Women Uk Court

மேலும், தங்களுக்கு உண்டான இடஒதுக்கீட்டில் திருநங்கைகள் உரிமை கோர கூடாது எனக்கூறி இங்கிலாந்தில் உள்ள பெண் உரிமை போராளிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணையை பெண் நீதிபதி உள்பட 4 பேர் கொண்ட சிறப்பு தனி அமர்வு நீதிபதிகள் நடத்தினர்.

அப்போது பெண்கள் என்னும் வரையறைக்குள் திருநங்கைகளை கருதுவது சட்டவிரோதம். திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது. திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர். இதனை பெண் உரிமை குழுவினர் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.