உயிரோடு இருக்கும் 6000 பேரை இறந்ததாக அறிவித்த அமெரிக்கா - என்ன காரணம்?

Donald Trump Joe Biden United States of America Citizenship
By Sumathi Apr 12, 2025 12:44 PM GMT
Report

உயிருள்ள 6000 பேரை இறந்தவர்களாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

சட்டவிரோத குடியேற்றம்

அமெரிக்கா சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் வரிசையில், உயிருள்ள 6000 பேரை இறந்தவர்களாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

america

அமெரிக்க குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிக வேலை செய்யும் குடியிருப்பாளர்களுக்கு அரசால் தனித்துவமான ஒன்பது இலக்க எண் வழங்கப்படும்.

50 கிலோ எடையுள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடை - உத்தரவிட்ட நாடு

50 கிலோ எடையுள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடை - உத்தரவிட்ட நாடு

அரசு அறிவிப்பு

இந்த எண்கள் வருமானம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உட்பட பல அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது பைடன் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது டிரம்ப் அரசு 6000 பேரின் சமூக பாதுகாப்பு எண்களை ரத்து செய்துள்ளது.

உயிரோடு இருக்கும் 6000 பேரை இறந்ததாக அறிவித்த அமெரிக்கா - என்ன காரணம்? | Us Govt Declared 6000 Living People Dead Reason

இதன் மூலம், அவர்கள் தாமாகவே அமெரிக்காவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 6,000 க்கும் மேற்பட்ட குடியேறிகள், பைடன் தொடங்கிய திட்டங்களின் மூலம் தற்காலிகமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.