அவரோட வாழ்ந்திருக்கேன்; ஏமாத்திட்டாரு - நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார்!

Transgender Nanjil Vijayan
By Sumathi Sep 08, 2025 03:21 PM GMT
Report

நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் விஜயன்

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் திருநங்கை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அவரோட வாழ்ந்திருக்கேன்; ஏமாத்திட்டாரு - நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார்! | Transgender Complaint Against Nanjil Vijayan

"கடந்த ஏழு வருடங்களாக நாஞ்சில் விஜயன் என்னுடன் தொடர்பிலிருந்தார். ஆனால் சிறிது நாட்களாக என்னுடன் பழகுவதைத் தவிர்த்து வருகிறார். என்னை மனதளவில் புண்படுத்தி விட்டார். ஒரு திருநங்கையாக எனக்கு நியாயம் கிடைக்குமா என்று தெரியவில்லை.

முதலில் நான் ஜாய் கிரிஸில்டாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மாதம்பட்டி ரங்கராஜன் போன்ற ஒரு பின்புலம் கொண்ட ஒருவர் மீது புகார் அளித்திருக்கிறார். கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கே நியாயம் கிடைக்கவில்லை.

என்னைப் போன்ற திருநங்கைக்கு நியாயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். மாத்திரைகள் கூட எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு நிச்சயம் நியாயம் வேண்டும்.

அவரை 11 ஆண்டுகளாகத் தெரியும், கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் நெருங்கிப் பழகினோம். ஒரு பெண்ணாக இருந்திருந்தால் கர்ப்பமாக இருக்கிறேன் என்று அதனை வெளிக்கொண்டுவருவார்கள், ஆனால் திருநங்கையான நான் எப்படி இதை நிரூபிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

ஸ்டாலின் அப்பா என் குழந்தைக்கு நீதி வேணும் - புகாரளித்த ஜாய் கிரிசில்டா!

ஸ்டாலின் அப்பா என் குழந்தைக்கு நீதி வேணும் - புகாரளித்த ஜாய் கிரிசில்டா!

திருநங்கை புகார்

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி என்னிடம் பாலியல் ரீதியான தொடர்பைக் கொண்டிருந்தார். மனைவியாகவும் நான் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் திருநங்கை என்பதால் என்னைத் தவிர்க்கிறார்.

nanjil vijayan

இந்தச் சமூகம் என்னை எப்படி எடுத்துக் கொள்ளும் என்று நாஞ்சில் விஜயன் கேட்கிறார். நான் திருநங்கை என்பது இதற்கு முன் நாங்கள் பழகும் போது அவருக்குத் தெரியாதா? அவரைத் தொடர்பு கொண்டு பேசலாம் என்று நினைத்தால் அதனைத் தவிர்க்கிறார்.

எல்லா சமூக வலைத்தளங்களிலும் என்னை பிளாக் செய்து வைத்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பு இருந்தே என்னுடன் பழகி இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது.

பிறகு என்னைத் தவிர்க்கிறார். அவருக்கு குழந்தை வேண்டுமென்று கூறியதால் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளச் சரி என்றேன், ஒரு திருநங்கையாக இருக்கும் எனக்கு வாழ்க்கை கொடுப்பதாகக் கூறியதால் அவரை நம்பினேன்.

என்னைப் பற்றி நாஞ்சில் விஜயனின் குடும்பத்திற்கு நன்றாகத் தெரியும். என்னுடன் பழகியது எல்லோருக்கும் தெரியும். திருமணத்திற்குப் பிறகு என்னை நிறைய விழாவிற்கு அழைப்பதை நிறுத்திவிட்டனர். அவ்வப்போது நாஞ்சில் விஜயனுக்குப் பண உதவி செய்திருக்கிறேன்.

கடைசியாக ஒரு ரெசார்டுக்குச் சென்றோம், அதிலிருந்து அவர் பேசுவதை நிறுத்திவிட்டார். எதற்காக என்னிடம் பேசுவதில்லை என்று தெரியவில்லை. எனக்கு ரொம்ப பிரஷராக இருக்கிறது. குழந்தை இருக்கிறது. இதற்கு மேல் உன்னுடன் பழக முடியாது என்று நாஞ்சில் விஜயன் கூறி விட்டார்.

இது எனக்கு மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. ஒரு காதலாக இருந்தாலும் அது நாஞ்சில் விஜயனுடன் இருக்க வேண்டும் என்று எண்ணி நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், நாஞ்சில் விஜயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் காட்டினார்.