ஓடும் ரயிலில் ஒரு நொடியில் நிகழ்ந்த விபத்து; படுத்திருந்த பயணி பரிதாப பலி - அதிர்ச்சி!

Kerala India Telangana Indian Railways Railways
By Jiyath Jun 27, 2024 04:04 AM GMT
Report

ரயிலில் படுக்கை அறுந்து விழுந்ததில் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பயணி உயிரிழப்பு 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாரஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அலிகான் (62). இவர் கடந்த 15-ம் தேதி எர்ணாகுளம்-டெல்லி இடையே இயக்கப்படும் மில்லேனியம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார்.

ஓடும் ரயிலில் ஒரு நொடியில் நிகழ்ந்த விபத்து; படுத்திருந்த பயணி பரிதாப பலி - அதிர்ச்சி! | Trains Upper Berth Collapses On Kerala Man Dies

அப்போது ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பெட்டியில் கீழ் பெர்த்தில் (படுக்கை) படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நடுவே உள்ள மிடில் பெர்த்தில் மற்றொரு நபர் படுத்திருந்தார். ரயில் தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மிடில் பெர்த் திடீரென அறுந்து அலிகான் மீது விழுந்தது.

இதில் அவரது கழுத்து எலும்புகள் உடைந்ததோடு, கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், அலிகானை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

'பார்த்தவுடனே டெலிட் செய்து விடுவேன்' பள்ளி மாணவியை மிரட்டிய நபர் - அடுத்து நடந்த சம்பவம்!

'பார்த்தவுடனே டெலிட் செய்து விடுவேன்' பள்ளி மாணவியை மிரட்டிய நபர் - அடுத்து நடந்த சம்பவம்!

விசாரணை 

அங்கு அவருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அலிகான் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வாரங்கல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் ரயிலில் ஒரு நொடியில் நிகழ்ந்த விபத்து; படுத்திருந்த பயணி பரிதாப பலி - அதிர்ச்சி! | Trains Upper Berth Collapses On Kerala Man Dies

மேலும், இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அலிகான் மீது விழுந்த இருக்கையை அதிகாரிகள் சோதனை செய்ததில் அது நல்ல நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், நடு படுக்கை உடைந்து விழவில்லை. மற்றொரு பயணி சரியாக சங்கிலியில் மாட்டாமல் சென்றதால் கீழே விழுந்தது.

இதனாலேயே கீழ்ப் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்துள்ளார். இதனையடுத்து சிகிச்சையில் இருந்த அவர் இறந்துள்ளார். அலிகானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்திய ரயில்வே ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.