முன்பதிவில்லாத பெட்டிகள் - இனி ரயிலில் இத்தனை டிக்கெட்டுகள் மட்டும்தான்
முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்பதிவில்லாத பெட்டி
இந்திய ரயில்வே பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு உட்பட பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.
அதன்படி, 74,000 ரயில் பெட்டிகள் மற்றும் 15,000 ரயில் என்ஜின்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது. ஒவ்வொரு என்ஜினிலும் 6 அதிநவீன கேமராக்கள் வைக்கப்படுவதுடன், இந்த கண்காணிப்பு கேமராக்களில் ரயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் காட்சிகள் தத்ரூபமாக பதிவாகும்.
தொடர்ந்து நீண்ட தூர ரயில்களில் இணைக்கப்பட்டுள்ள முன்பதிவில்லாத ஒரு பெட்டிக்கு தலா 150 டிக்கெட்டுகள் மட்டும் வழங்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் கொல்லம், அனந்தபுரி,
புதிய மாற்றங்கள்
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா 4 பெட்டிகள் என மொத்தம் 12 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகிறது. ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் என மொத்தம் 1,800 டிக்கெட்டுகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் வழங்கப்படும்.
முன்பதிவில்லாத பெட்டியில் 90 முதல் 100 பேர் வரை பயணிக்க இருக்கை வசதி உள்ளது. இதுகுறித்து சாதக, பாதகங்களை பரிசீலனை செய்து நடைமுறைகள் வகுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது தினந்தோறும் ஒவ்வொரு ரயிலிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் 300 முதல் 350 பேர் மூச்சுத்திணறல் ஏற்படும் வகையில் நெருக்கியவாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.