ரூ.500 நோட்டு ரத்து; இனி ஏடிஎம்மில் 200, 100 ரூபாய் மட்டும்தான்? மத்திய அரசு விளக்கம்
ரூ.500 வினியோகிப்பதை நிறுத்தப்போவதாக பரவிய தகவலுக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
ரூ.500 ரத்து
500 ரூபாய் நோட்டை மத்திய அரசு ரத்து செய்யப்போவதாக, கடந்த மாதம் திடீரென ஒரு செய்தி பரவியது. மேலும், இதுதொடர்பாக வங்கிகளின் ஏடிஎம்களில் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி, ‛‛500 ரூபாய் நோட்டுக்கான டெண்டர் சட்டப்பூர்வமானதாவே உள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும்,
மத்திய அரசு விளக்கம்
குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிப்பதற்காவும் 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 500 ரூபாய் நோட்டு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்பதால், தாராளமாக பயன்படுத்தலாம்'' என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில்,
''இந்த தகவல் தவறாக பரப்பப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி இதுபோன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. சட்டப்பூர்வமாக ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்'' என்று கூறப்பட்டுள்ளது.