ரயிலில் டீ குடிப்பீங்களா? அப்போ இந்த வீடியோ உங்களுக்குத்தான்!
ரயிலில் டீ குடிப்பது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் டீ
இன்ஸ்டாகிராமில் ரயிலில் நடந்த காட்சிகள் குறித்த வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், 'டிரெயின் கி சாய்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவிடப்பட்ட ஒரே நாளில், 3 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதில், ரயில் கழிவறையில் ஒருவர் டீ கேனை கழுவ ஜெட் ஸ்ப்ரேயைப் பயன்படுத்துகிறார்.
அதிர்ச்சி வீடியோ
இந்த வீடியோவை அவருக்குத் தெரியாமல் பின்னால் இருந்து ஒருவர் எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, பலர் விமர்சித்து வருகின்றனர்.
மேலும், ரயில் பயணத்தின்போது உள்ள தூய்மை குறித்து பலரும் ரயில்வே அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்த சம்பவம் எந்த ரயிலில் நடந்தது, தேதி அல்லது நேரம் குறித்த எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.