பணம் செலுத்தாமலே ரயில் டிக்கெட் வாங்கலாம் - ஆனால் ஒரு நிபந்தனை

Money Indian Railways
By Karthikraja Jan 24, 2025 01:30 PM GMT
Report

 இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவில் Pay Later என்னும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே தினமும் பல்வேறு வழித்தடங்களில் நூற்றுக்கணக்கான ரயில்களை இயக்கி வருகிறது. இதில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். 

railway book now pay later scheme

இந்திய ரயில்வேயானது பயணிகளின் வசதிக்காக புதிது புதிதாக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிதாக ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இனி ரயில் டிக்கெட் கிடைப்பது ஈசி - வருகிறது AI தொழில்நுட்பம்

இனி ரயில் டிக்கெட் கிடைப்பது ஈசி - வருகிறது AI தொழில்நுட்பம்

Pay Later திட்டம்

தற்போது, Book Now, Pay Later என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பணம் செலுத்த தேவையில்லை. இதற்கு இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசிக்கு சென்று உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும். 

irctc book now pay later scheme

இதில், Book Now என்பதை தேர்வு செய்து, அதில் பயண விவரங்கள் மற்றும் தேவையான இதர தகவல்களை நிரப்பி Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.அதன் பின்னர் கட்டணம் செலுத்தும் பக்கத்தில் உங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் போன்றவற்றை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

14 நாட்கள்

டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு பின்னர் பணம் செலுத்த விரும்பினால், www.epaylater.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு Pay Later என்பதை தேர்ந்தெடுத்து முன்கூட்டியே பணம் செலுத்தாமல் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆனால் டிக்கெட்டை முன்பதிவு செய்த 14 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். இதற்கு எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை. 14 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த தவறினால் கட்டணத்தில் 3.5% சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

டிக்கெட் முன்பதிவு செய்வதில் உள்ள தாமதம், திடீர் பயணத்தின் போது ஏற்படும் நிதிச்சுமையை குறைத்து Pay Later மூலம் உடனடியாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால் இந்த திட்டத்திற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.