இடம் ஒன்னு தான்...ஆனா 2 வெவ்வேறு ரயில்வே ஸ்டேஷன்!! - இந்த ரயில் நிலையம் உங்களுக்கு தெரியுமா?
நாட்டின் மிக பெரிய போக்குவரத்து சேவை என்றால் அது ரயில் சேவை தான். நடுத்தரவர்க்க மக்களின் அன்றாட வாழக்கையில் முக்கிய இடத்தை ரயில் பயணம் பிடிக்கிறது.
நாடு முழுவதும் தினந்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள். அப்படி இருக்கும் ரயில் நேரங்களும், ஸ்டேஷன்களும் அன்றாடம் பயணிப்போருக்கு குழப்பம் தராத ஒரு விஷயமாக இருக்கும்.
ஆனால், ஒரே இடத்தில் 2 ஸ்டேஷன்கள் இருந்தால், அதுவும் வெறும் வினாடிகள் தூரத்தில் இருந்தால், சட்டென போகும் போது நீங்கள் குழம்பாமல் இருப்பீர்கள். உங்களை குழப்பவே அப்படி ஒரு ரயில் நிலையம் உள்ளது.
மேற்குவங்க மாநிலத்தின் பீர்பூம் மாநிலத்தில் அமைந்துள்ள சைந்தியா மற்றும் அஹ்மத்பூர் ஸ்டேஷன்கள் தான் அவை. விஷயமென்னவென்றால் வரும் ரயில் முதல் நடைமேடையில் நின்றால் அது சைந்தியா ஸ்டேஷன், இரண்டாவது நிலையத்தில் நின்றால் அது அஹ்மத்பூர் ஸ்டேஷன்.
இது போன்ற விஷயம் எங்கிருந்து துவங்கியது என்பது குறித்து பெரிதாக தகவல் இல்லை. இது ரயில் நிலைய அதிகாரிகளின் தவறுதலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேற்குவங்காளத்தின் ஹௌரா கோட்டத்தின் கட்டுப்பாட்டின் இந்நிலையம் வருகின்றது.