டீ பிரேக் எடுத்த டிரைவர் - 90 Km/hr Speed'இல் - 70 கி.மீ ஓடிய ரயில்..!
சரக்கு ரயில் ஒன்று ஓட்டுனரே இல்லாமல் 70 கி.மீ ஓடிய சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
டீ பிரேக்
ரயிலின் டிரைவர் ரயிலில் இருந்து இறங்குவதற்கு முன் கை பிரேக்கை இழுக்க மறந்துள்ளார்.ரயில் பதான்கோட் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது.
பிரேக் போடப்படாததால், சரிவான பாதையில் ரயில் செல்லத் தொடங்கியது என விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்தனர். கற்களை ஏற்றிச் சென்ற அந்த சரக்கு ரயில் உச்சி பஸ்ஸியில் நிறுத்தப்படுவதற்கு முன், மணிக்கு 100 கிமீ வேகத்தில் ஐந்து நிலையங்களைக் கடந்ததுள்ளது.
மரக்கட்டைகள்
ரயிலை நிறுத்த ரயில்வே அதிகாரி மரக்கட்டைகளை தண்டவாளத்தில் வைத்ததை பெரும் போராட்டத்திற்கு பிறகு ரயிலை நிறுத்தியுள்ளனர். ஜம்மு'வின் கதுவாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் வரை சுமார் 80 கிமீ தூரம் அந்த ரயில் பயணித்துள்ளது.
ரயிலின் டிரைவர் டி குடிக்க ரயிலில் இருந்து இறங்கியபோது பிரேக் போட மறுத்ததால், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 5 ரயில் நிலையங்களை இந்த ரயில் பயணித்த போதும், எந்த வித பொருள் அல்லது உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை