அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து செல்லும் ரயில் - அதிசயம் ஆனால் உண்மை!
அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து செல்லும் ரயில் குறித்த தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடப்பற்றாக்குறை
சீனாவின், சுன்கிங் என்ற பகுதி மலை நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு நிறைய உயரமான கட்டிங்கள் இருப்பதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், மக்கள் வசிக்கும் 19 மாடி குடியிருப்பு கட்டடத்தின் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கேயே ரயில் நிலையமும் செயல்படுகிறது.
அதி நவீன ரயில்வே
இந்த 19 மாடி கட்டடத்தில் 6வது மற்றும் 8வது தளத்தின் இடையே ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு அதன் வழியே தினமும் ரயில்கள் சென்றுவருகின்றன. இதில் சைலென்சிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரயிலின் சத்தம் மக்களின் காதுகளில் விழாது. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியதும் ரயில் நிலையம் இருக்கும்.
உலகின் முதல் தண்டவாளங்கள் இல்லாமல் ரயில் செல்லும் முறை இங்குதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.