நான்தான் வண்டியை ஓட்டுவேன்..அடித்து கொண்டு ஏறிய ரயில்வே ஊழியர்கள் - வைரல் வீடியோ!

Viral Video India Rajasthan
By Swetha Sep 10, 2024 09:56 AM GMT
Report

வந்தே பாரத் ரயிலை யார் ஓட்டுவது என்று ரயில்வே ஊழியர்கள் சண்டை போட்ட வீடியோ வைரலாகி வருகிறது..

 ரயில்வே ஊழியர்கள்

இந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் இந்திய ரயில்வேயின் திய அதிவேக வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது. மேலும் பல்வேறு புதிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

நான்தான் வண்டியை ஓட்டுவேன்..அடித்து கொண்டு ஏறிய ரயில்வே ஊழியர்கள் - வைரல் வீடியோ! | Train Loco Pilots Fought Over Riding Train Viral

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் முதல் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா வரை புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயிலை இயக்க மேற்கு மத்திய ரயில்வே, வடமேற்கு ரயில்வே மற்றும் வடக்கு ரயில்வே ஆகிய மூன்று டிவிஷன்களில் இருந்தும்,

வந்தே பாரத் ரயிலில் திடீரென கேட்ட பயங்கர சத்தம் - அலறிய பயணிகள்!

வந்தே பாரத் ரயிலில் திடீரென கேட்ட பயங்கர சத்தம் - அலறிய பயணிகள்!

வைரல் வீடியோ

லோகோ பைலட்களுக்கு உத்தரவு வந்ததால் எந்த டிவிசனின் லோகோ பைலட் ரயிலை இயக்குவது என்பதில் ஆரம்பமே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த ரயிலை இயக்குவதும் மூன்று டிவிஷன் லோகோ பைலட்களுக்குள் சண்டை ஏற்பட்ட நிலையில் ரயில் இயக்க அறைக்குள் புக அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


அப்போது ரயில் கதவின் கண்ணாடி ஜன்னல் உள்ளிட்டவை சேதமடைந்தன. அதுமட்டுமின்றி லோகோ பைலட்டுகள் ஒருவரை ஒருவர் சட்டையை கிழித்து சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.