வந்தே பாரத் ரயிலில் திடீரென கேட்ட பயங்கர சத்தம் - அலறிய பயணிகள்!
வந்தே பாரத் ரயிலில் செல்போன் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தே பாரத்
சென்னையில் இருந்து மைசூர் வரை வந்தே பாரத் விரைவு ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அதில், C11 பெட்டியில் பயணம் செய்த குஷ்நாத்கர் என்ற பயணி, தனது இருக்கை அருகே தன்னுடைய ரியல்மீ செல்போனை சார்ஜ் போட்டுள்ளார்.
இந்நிலையில், ஆம்பூரை கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது, சார்ஜ் போட்டிருந்த செல்போன் திடீரென வெடித்தது. இதனால், அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர். உடனே வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது.
செல்போன் வெடிப்பு
இதனையடுத்து, C11 மற்றும் C12 பெட்டிகளின் கதவுகளைத் திறந்து ரயில்வே ஊழியர்கள் புகையை வெளியேற்றினர். தொடர்ந்து ரயிலில் உள்ள மின் இணைப்புகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
அதன்பின், 35 நிமிடங்களுக்குப் பிறகு வந்தே பாரத் ரயில் மைசூரு நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையில், செல்போன் வெடித்ததால் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.