ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து - சென்னையில் பரபரப்பு!

Chennai
By Sumathi Feb 15, 2024 04:18 AM GMT
Report

சென்ட்ரல் அருகே ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து நிகழ்ந்துள்ளது.

ரயில் விபத்து

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள சாணிகுளம் என்ற இடத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் காலியாக ரயில் ஒன்று சென்று உள்ளது. அப்போது எதிர்பாராதவிதாக இந்த ரயிலின் எஞ்சின் தண்டாவளத்தில் இருந்து விலகி கீழே இறங்கியுள்ளது.

train-derailment

உடனே சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே ஊழியர்கள், ரயில் பெட்டியின் சக்கரத்தை தண்டவாளத்திற்கு உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல், மற்றொரு இடத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

எருமை மாடுகள் மீது மோதி சேதம் அடைந்த வந்தே பாரத் ரயில் - மாட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

எருமை மாடுகள் மீது மோதி சேதம் அடைந்த வந்தே பாரத் ரயில் - மாட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

தொடரும் அபாயம்

அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. முன்னதாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு பணிமனைக்குச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. ரயில் பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின.

chennai

அதில், பயணிகள் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இவ்வாறு ரயில் பெட்டிகள் தடம்புரள்வது அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.