தண்டாவளத்தில் இருந்து தடம் இறங்கிய ரயில் என்ஜின் - திருச்சியில் பரபரப்பு
திருச்சி ஜங்ஷனில் எஞ்சின் சோதனை ஓட்டத்தின் பொது தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கியதால் அந்த வழியாக செல்ல இருந்த மற்ற ரயில்களின் நேரமும் தாமதமானது.
என்ஜின் தடம் இறங்கியது
திருச்சி ஜங்க்சனில் ரயில் எஞ்சின் ஒன்று பரிசோதனைக்கு தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. அப்போது ஜங்க்சனில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவில் அந்த எஞ்சின் தண்டவாளத்தில் இருந்து தடம் இறங்கிவிட்டது.
அந்த இருப்பு பாதையானது, திருச்சியில் இருந்து மதுரை, ராமேஸ்வரம் , புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பாதை என்பதால் அந்த வழியாக செல்லும் மற்றும் திருச்சி ஜங்சன் வரும் ரயில்கள் தாமதமாக புறப்படும் நிலை ஏற்பட்டது.
எஞ்சின் தடம் இறங்கியதன் காரணமாக அந்த சமயம் திருச்சி ஜங்க்சன் வந்த குருவாயூர் ரயில் மற்றும் பயணிகள் ரயில் சுமார் 2 மணிநேரம் தாமதமாகும் நிலை ஏற்பட்டது.
மதுரை மார்க்கமாக செல்லும் மற்ற ரயில்களின் நேரமும் இதனால் மாற்றியமைக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.