இனி அபாய சங்கிலி இழுக்கக்கூடாது; மீறினால் அபராதம் - என்ன காரணம்?

Railways
By Sumathi Oct 28, 2025 07:25 AM GMT
Report

இனி சில காரணங்களுக்காக அபாய சங்கிலியை இழுத்தால் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

அபாய சங்கிலி

ஓடும் ரயிலில் சிலர் மொபைல் போனை தவற விடுகின்றனர். பர்ஸ், மொபைல் போன் அல்லது வேறு ஏதேனும் பொருள் கீழே விழும் போது, பயணியர் முதலில் பதற்றப்படக் கூடாது.

railways

பொருள் விழும் இடத்தை குறித்துக் கொண்டு, ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படை போன்றோரிடம் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக அபாய சங்கிலியை இழுக்கக்கூடாது. மாறாக ரயில்வே உதவி எண், 139 அல்லது 182ல் தெரிவிக்கலாம்.

தமிழ்நாட்டில் இலவச புற்றுநோய் தடுப்பூசி யாருக்கெல்லாம்?- அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழ்நாட்டில் இலவச புற்றுநோய் தடுப்பூசி யாருக்கெல்லாம்?- அமைச்சர் மா.சுப்ரமணியன்

அபராதம் 

புகாரை பதிவு செய்யும் போது, ரயில் எண், இருக்கை எண், உங்கள் அடையாள சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். பதிவு செய்யப்பட்ட பு காரின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று தேடுவர். மொபைல் போன் அல்லது பொருட்கள் மீட்கப்பட்டதும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இனி அபாய சங்கிலி இழுக்கக்கூடாது; மீறினால் அபராதம் - என்ன காரணம்? | Train Chains Pulled Some Reasons Will Be Fine

அதேநேரம், மொபைல் போன், நகைகள் போன்றவற்றை யாரேனும் திருடிச் சென்றால், அபாயச் சங்கிலியை இழுக்கலாம். ஆனால் மொபைல் போன் விழுந்ததற்காக, அவசரகால சங்கிலியை இழுப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.

இதனால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கலாம் அல் லது மேற்கண்ட இரண்டும் விதிக்கப்படலாம்.