சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - 6 பேர் பலி - என்ன நடந்தது?
சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயில் விபத்து
சத்தீஸ்கர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக பிலாஸ்பூர் – ஹவுரா வழித் தடத்தில் செல்லும் ரயில்களின் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டபோது மேலே செல்லும் மின்சார வயர்களில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
6 பேர் பலி
இதனை சரி செய்தால் மட்டுமே போக்குவரத்து சீரடையும் என்பதால் நிலைமை சீரடைய கூடுதல் நேரம் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

20க்கும் அதிகமானோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சமும்,
படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சமும், காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.