ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை உயிரிழப்பு - என்ன நடந்தது?
21 கோடி ரூபாய் மதிப்பிலான எருமை மாடு திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.21 கோடி மதிப்பு
ராஜஸ்தானில் நடக்கும் பிரபல புஷ்கர் கால்நடை கண்காட்சி, இந்தியாவின் மிகப்பெரிய கால்நடை திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது.

இதில் ஆயிரக்கணக்கான மாடுகள், குதிரைகள், ஒட்டகங்கள், எருமைகள் போன்ற கால்நடைகள் விற்பனைக்காகவும், பார்வைக்காகவும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
எருமை மரணம்
அந்தவகையில், ’அன்மோல்’ என்ற எருமை மாட்டின் விலை, 21 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்து. இந்த எருமைக்கு நாள்தோறும் பால், நெய், பருப்பு வகைகள், முந்திரி உள்ளிட்ட உலர் பழங்கள் உணவாக வழங்கப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து இது இணையத்தில் பெரிதும் கவனம் பெற்றது. இந்நிலையில், திடீரென அதன் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எருமைக்கு உடல் உபாதைகள் இருந்த நிலையிலும், அதைப் பருமனாகவும் கொழுப்பாகவும் காட்ட அவர்கள் பல மருந்துகளை செலுத்தி உள்ளனர் என விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.