திருமணம் முடிந்த கையோடு காரில் பயணம் செய்த புதுமண தம்பதிகள்..நொடியில் நடந்த கொடூர சம்பவம்!
திருமணம் முடிந்த கையோடு காரில் பயணம் செய்த புதுமண தம்பதிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
புதுமண தம்பதிகள்
உத்தரப் பிரதேச மாநிலம் ஜார்கண்ட் மாவட்டத்தில் நேற்று மாலை மணமக்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இதனையடுத்து தம்பூர் பகுதியில் உள்ள மணமகனின் வீட்டுக்குச் செல்வதற்காகப் புதுமண தம்பதி காரில் உறவினர்கள் 11 பேர் புறப்பட்டனர்.

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த அதிவேகத்துடன் கார் எதிரே வந்த டெம்போ மீது மோதியது. அப்போது சாலையில் அருகே தொண்டபட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், மணமகள், மணமகன், அவருடைய சகோதரர் மற்றும் அத்தை உள்ளிட்ட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த மற்ற 5 பேர் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர் . காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் அடர் பனியால், தெளிவற்ற வானிலை காணப்பட்டது. இதனால், குறைந்த தொலைவே பார்க்கக் கூடிய சூழலில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
குதிரை பேரம்..! தவெகவுக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ நீக்கம் - உச்சக்கட்ட கோவத்தில் TTV தினகரன் IBC Tamil
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி ராஜ யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil