காற்றில் பரவிய எலி மருந்து - 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு

Tamil nadu Chennai Death
By Karthikraja Nov 14, 2024 09:30 PM GMT
Report

எலி மருந்து காற்றில் பரவியதால் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

எலித்தொல்லை

சென்னை குன்றத்தூரில் கிரிதரன் - பவித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 6 வயதில் வைஷ்ணவி(6) என்ற மகளும், சுதர்சன்(1) என்ற மகனும் உள்ளனர். 

kundrathur

இவர்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் எலித்தொல்லை அதிகமாக உள்ளதால் எலிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளை வீட்டின் பல்வேறு இடங்களில் வைத்துள்ளனர். 

பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வீசப்பட்ட குழந்தை - நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்

பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வீசப்பட்ட குழந்தை - நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்

குழந்தைகள் உயிரிழப்பு

இதனையடுத்து இந்த மருந்தில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் பரவியதால் வீட்டில் இருந்த 4 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, உடனடியாக 4 பேரும் குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

death body hand

இந்நிலையில் இரு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். கிரிதரன் மற்றும் அவரது மனைவி மேற்சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எலி மருந்தால் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.