பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வீசப்பட்ட குழந்தை - நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்
பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டிலில் குழந்தை
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேதுபாவாசத்திரம் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குணபாலன் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ளது.
அவ்வழியே சென்ற சிலர், பிறந்து சில நாள்களே ஆண் குழந்தை ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
போலீஸ் விசாரணை
இது குறித்து உடனடியாக சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பிளாஸ்டிக் டப்பாவில் இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பச்சிளங்குழந்தையை வீசிச் சென்றவர்களை தேடிவருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான், குழந்தை பிறக்கும் போதே இறந்து பிறந்ததா அல்லது கொல்லப்பட்டதா என தெரிய வரும்.
குழந்தைபேறுக்காக பலரும் ஏங்கி உள்ள நிலையில் பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வீசி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.