மெரினாவில் நடக்கும் விமான சாகச நிகழ்ச்சிக்கு போறீங்களா..அப்போ இதை பாருங்க!

M K Stalin Tamil nadu Chennai
By Vidhya Senthil Oct 06, 2024 05:46 AM GMT
Report

மெரினாவில் நடைபெற உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சிக்காக மாநகரில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்ப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில்

மெரினா

1. காமராஜர் சாலையில் காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2. திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை அண்ணாசாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

air force in chennai

இதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

சென்னை மெரினா விமான சாகச நிகழ்வு - கலந்து கொள்வது எப்படி?

சென்னை மெரினா விமான சாகச நிகழ்வு - கலந்து கொள்வது எப்படி?

போக்குவரத்து

3. அண்ணா சிலையிலிருந்து MTC பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேனி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு. மந்தைவெளி. மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

traffic

4. இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி RA புரம் 2வது பிரதான சாலை TTK சாலை RK சாலை அண்ணாசாலையை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

5. வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை. கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் 0700 மணி முதல் 1600 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.