கிண்டி கத்திப்பாரா வழியா போறீங்களா.. இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

Tamil nadu Chennai Tamil Nadu Police
By Vidhya Senthil Oct 11, 2024 03:19 AM GMT
Report

சென்னை கிண்டி கத்திப்பாராவில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை

சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மவுண்ட் பூந்தமல்லி ரோடு-ஆர்மி ரோடு சந்திப்பில் புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை பணிகள் மேற்கொள்வதால்,

chennai

கத்திப்பாரா நோக்கி செல்லும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் செல்ல பரிந்துரைக்கப்பட்டு இன்று முதல் 14-ந்தேதி வரையில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் போக்குவரத்து மாற்றம்...!

புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் போக்குவரத்து மாற்றம்...!

போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 போக்குவரத்து

அதற்கு பதிலாக அவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை - பெல் ராணுவ சாலை சந்திப்பில் புதியதாக அமைந்துள்ள சாலை வழியாக டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூவில் (வலதுபுறம் திரும்பி) இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று இலக்கை அடையலாம்.

traffic

மற்ற வாகனங்கள் கண்டோன்மென்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு- சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு பகுதி சாலை வழியாக ஒலிம்பியா 100 அடி சாலை சந்திப்பு அடைந்து வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலது புறமாகவும்,

வடபழனியை அடைய இடது புறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.