கருணாநிதி நாணய வெளியீட்டு விழா - சென்னையில் போக்குவரத்து மாற்றம்

M K Stalin M Karunanidhi DMK
By Vidhya Senthil Aug 18, 2024 06:06 AM GMT
Report

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 7 மணியளவில் நடைபெற உள்ளது.

நாணயத்தின் வெளியீட்டு விழா 

இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு கருணாநிதியின் நுாற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். மேலும் இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கருணாநிதி நாணய வெளியீட்டு விழா - சென்னையில் போக்குவரத்து மாற்றம் | Kalaignar Centenary Today Traffic Change Chennai

   இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1. அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், வாலாஜா சாலை, அண்ணா சாலை மற்றும் காலைவாணர் அங்கம் விழா நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படும்.இதனால் பொதுமக்கள் தங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு பயணத்தினை திட்டமிட்டு செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

2. மற்ற மூத்த கலைஞர்கள் கதீட்ரல் சாலை, ஆர்கே சாலை, காமராஜ் சாலை, அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்தை அடையலாம்.

ECR பக்கம் 2 நாள் போகாதீங்க..! அதிரடி போக்குவரத்து மாற்றங்கள்..!

ECR பக்கம் 2 நாள் போகாதீங்க..! அதிரடி போக்குவரத்து மாற்றங்கள்..!

3. கலைவாணர் அஙர்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்து செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

4. பல்வேறு மாவட்ட கனரக வாகனங்களில் இருந்து (பேருந்துகள் மற்றும் மாக்சிகேப்) பிற கட்சி வாகனங்கள் அண்ணா சிலை வழியாக பெரியார் சிலை, தீவுத்திடல் மைதானம், பிடபிள்யூடி மைதானம் வழியாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கி செல்லுமாறு அனுமதிக்கப்படுவார்கள். 5. பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை, ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் அனைத்து இலகுர வாகனம் மற்றும் தன்னார்வலர்களின் மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படும்.

கருணாநிதி நாணய வெளியீட்டு விழா - சென்னையில் போக்குவரத்து மாற்றம் | Kalaignar Centenary Today Traffic Change Chennai 

6. வாலாஜா சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, போர் நினைவு சின்னம், கொடிப்பணியாளர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் வணிக வாகனங்கள் 10 மணி முதல் மாலை 4 மணி வரை கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.

போக்குவரத்து மாற்றம்

7. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை இடையூறாகவும் மற்றும் விவிஐபி-கள் வரும் வழித்தடத்திலும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

8. தொண்டர்கள் மற்றும் கட்சியினர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

9. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் காமராஜர் சாலை மற்றும் வாலாஜா சாலை முழுவதும் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.