புத்தாண்டு கொண்டாட்டம்; சென்னையில் போக்குவரத்து மாற்றம், மேம்பாலங்கள் மூடல் - முழு விவரம்

Tamil nadu Chennai Tamil Nadu Police
By Karthikraja Dec 30, 2024 03:51 PM GMT
Report

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டுக்கு சென்னையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்

புது வருடமான 2025-ஐ வரவேற்கும் வகையில் ஜனவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் புத்தாண்டு விடப்படும். அதே போல் சென்னையில் புத்தாண்டு கொண்டாடத்திற்கு பெரும்பாலான மக்கள் கடற்கரைகளுக்கு செல்வார்கள்.  

2025 new year celebration chennai

இந்நிலையில் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் சென்னை மாநகர காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

புத்தாண்டு; இதையெல்லாம் செய்து வாழ்க்கை போயிராம.. கமிஷனர் எச்சரிக்கை!

புத்தாண்டு; இதையெல்லாம் செய்து வாழ்க்கை போயிராம.. கமிஷனர் எச்சரிக்கை!

போக்குவரத்து மாற்றங்கள்

காமராஜர் சாலை மற்றும் எலியாட் கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்

1. கடற்கரை உட்புற சாலை 31.12.2024 அன்று 19.00 மணி முதல் 01.01.2025 அன்று 08.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் 19.00 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. மேலும் அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.

2. காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31.12.2024 20.00 மணி முதல் 01.01.2025 06.00 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும்.

3. அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை. தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தவெளி ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோடு, ஆர்.கே மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

4. டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்கே.மட் சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.

5. பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (வடக்கு) வடக்கு கோட்டை சுவர் சாலை முத்துசாமி சாலை. முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட் அண்ணாசாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம். 

6. வாலாஜா சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. சுவாமி சிவானந்தா சாலை. (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில்) பாரதி சாலை X விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாவை (எம்.ஆர்டிஎஸ் அருகில்) லாயிட்ஸ் சாலை நடேசன் சாலை X டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பு வரை, 

bridge close in chennai new year 2025

7. தெற்கு கால்வாய் கரை சாலையிலிருத்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

8. கொடிமரச் சாலையில், இரவு 20.00 மணி முதல் வாலாஜா பாயிண்டிலிருந்து போர் நினைவுச்சின்னம் நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

9. கிரீன்வேஸ் பாயிண்டிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் ஆர்கே மட் யூ-திருப்பத்தில் திரும்பி, திருவேங்கடம் தெரு, தேவநாதன் தெரு. ஆர்கே மடம் சாலை, வெங்கடேஸ்வர அக்ரஹாரம் தெரு (சாய்பாபா கோயில் நாகேஸ்வர பூங்கா வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

10. வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் ஆர்.பி சுரங்கபாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை. அண்ணா ரோட்டரி கத்திட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி சந்திப்பு வழியாக வாலாஜா சந்திப்பை அடைவதற்கு தெற்கு கால்வாய் சாலைவை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம்.

11. அனைத்து மேம்பாலங்களும் 31122024 அன்று 22.00 மணி முதல் 01.01.2025 அன்று 06.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். 

வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்

காமராஜர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள்

1. சுவாமி சிவானந்தா சாலை (தூர்தர்ஷன் கேந்திரத்திலிருந்து பெரியார் சிலை நோக்கி ஒற்றை வரிசை நிறுத்தம்)

2. வாலாஜா சாலை (தமிழ்நாடு மாநில விருந்தினர் மாளிகை அருகே அண்ணா சிலையை நோக்கி ஒற்றை வரிசை நிறுத்தம்)

3. தீவுத்திடல் மைதானம்

4. பொதுப்பணித்துறை மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்)

5. பிரஸ் கிளப் சாலை 

6. பொதுப்பணித்துறை வளாகம் காவல்துறை வாகனங்கள் மட்டும்

7. கலைவாணர் அரங்கம்

8. விக்டோரியா விடுதி

9. பாரதி சாலை (விக்டோரியா ஹோட்டல் சாலை X பாரதி சாலை சந்திப்பில் இருந்து - ஒற்றை வரிசை நிறுத்தம்)

10. லாயிட்ஸ் சாலை (மாற்று திறன் ஆணையர் அலுவலகத்திற்கு அருகில் நடேசன் சாலையை நோக்கி ஒற்றை வரிசை நிறுத்தம்)

11. இராணி மேரி கல்லூரி வளாகம்.

12. லேடி வெலிங்டன் பள்ளி

13. NKT பள்ளி

14. டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகே ஐஸ் ஹவுஸ் நோக்கி - ஒற்றை வரிசை நிறுத்தம்)

15. பரத் சாரணர் வளாகம்

16. நெற்கு கால்வாய் சாலை (மந்தவெளி நோக்கி)

17. தெற்கு கால்வாய் சாலை (பட்டினம்பாக்கம் நோக்கி)

எலியாட் கடற்கரை

எலியாட் கடற்கரை பகுதியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

1. 31.12.2024 அன்று 20.00 மணி முதல் 01.01.2025 அன்று 06.00 மணி வரை 6வது அவென்யூ நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

2  6வது அவென்யூ 5வது அவென்யூ சந்திப்பு, 4வது மெயின் ரோடு சந்திப்பு, 3வது மெயின் ரோடு சந்திப்பு. 16வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7வது அவென்யூ எம்ஜி ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும்.

எலியாட் கடற்கரைக்கு அருகில் வாகன நிறுத்தத்திற்கான செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்:

1. பெசன்ட் நகர் 4வது அவென்யூவில் ஒரு பக்கம் ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்

2. பெசன்ட் நகர் 3வது மெயின் ரோட்டில் ஒரு பக்கம் வாகன நிறுத்தம் ஒற்றை வரிசை 

new year 2025 chennai car parking place

3. பெசன்ட் நகர் 4வது மெயின் ரோட்டில் ஒரு பக்கம் வாகன நிறுத்தம் ஒற்றை வரிசை

4. பெசன்ட் நகர் 5வது அவென்யூவில் ஒரு பக்கம் ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்

5. பெசன்ட் நகர் 2 வது அவென்யூவில் ஒரு பக்கம் - ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்

6. பெசன்ட் நகர் 3 வது அவென்யூவில் ஒரு பக்கம் ஒற்றை வரிசை வாகன நிறுத்தம்

7. ஆல்காட் பள்ளி, பெசன்ட் நகர்

மூடப்பட்டுள்ள மேம்பாலங்கள்

சென்னையில் 23 மேம்பாலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு - 8

மியூசிக் அகாடமி மேம்பாலம், ஜி.ஆர்எச் மேம்பாலம், பீட்டர்ஸ் சாலை மேம்பாலம், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் நுழைவாயில், காந்தி மண்டபம் மேம்பாலம், இந்திரா நகர் U-திருப்பம், பாந்தியன் மேம்பாலம், மகாலிங்கபுரம் மேம்பாலம்

தெற்கு - 10

ஜெமினி மேம்பாலம் மற்றும் GN செட்டி (உள்வரும் வாகனங்கள்), ஜிகேளம் மேம்பாலம், வாணி மஹால் மேம்பாலம், உஸ்மான் மேம்பாலம் சக்கரபாணி தெருவில் இருந்து ரெங்கராஜபிரம் மேம்பாலம், மகாலிங்கபுரம் மேம்பாலம் தெற்கு, வடபழனி மேம்பாலம், அடையார் மேம்பாலம் (one way), வேளச்சேரி மேம்பாலம், விமான நிலைய மேம்பாலம்

வடக்கு - 5

புதிய வள்ளலார் பாலம், அண்ணா ஆர்ச் மேம்பாலம், 100 அடி சாலை மேம்பாலம், திருமங்கலம் பாலம் முரசொலி மாறன் மேம்பாலம் (வடக்கு)

மற்ற ஏற்பாடுகள்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை. ANPR கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களின் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன இக் கேமராக்கள் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து, வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. 

police chennai marina beach 2025 new year

மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டை முன்னிட்டு வாகனம் ஓட்டுதல் / குடிபோதையில் வாகனம் ஓட்டுதல். அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் /சாகச சவாரி செய்தல், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் போன்றவற்றை கண்டறிந்து தொழில்நுட்ப முறையில் ANPR கேமரா மூலமாக தானகவே வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைபிடித்து, புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடுவதுடன் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.