புத்தாண்டு; இதையெல்லாம் செய்து வாழ்க்கை போயிராம.. கமிஷனர் எச்சரிக்கை!
புத்தாண்டையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புத்தாண்டு
புத்தாண்டு தினத்தை பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில், கடற்கரை, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனி கவனம் செலுத்த வேண்டும். பைக் ரேசில் ஈடுபடுவோரைத் தடுத்து, கண்காணிக்க, கண்காணிப்பு சோதனைக் குழுக்களை அமைக்க வேண்டும்.
கட்டுப்பாடுகள்
முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்களை பயன்படுத்தி கண்காணிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவக் குழுவினருடன் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
வழக்குப் பதிவு செய்ய நேரிட்டால் பாஸ்போர்ட், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விண்ணப்பம் சரிபார்ப்பின் போது பாதிப்பு ஏற்படும். எனவே இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
சென்னையில் டிச.,31 மாலை முதல் ஜன.,1 காலை வரை பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதி இல்லை. மெரினா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை கடற்கரைகளில் குதிரைப்படை மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.