நா பண்ண விரும்பல விமர்சனம்.. மக்களுக்கு வேணும்..! விஜய் அரசியல் entry - TR பஞ்ச்..!
நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
விஜய்
கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டின் தலைப்பு செய்து விஜய் அரசியல் என்ட்ரி. தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நிறுவியுள்ள அவர், வரும் 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலை குறித்து வைத்து தங்கள் கட்சி பணி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நடிகராக இருக்கும் போதே, அரசியலில் கால்பதிக்கும் விஜய்க்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வரவேப்பை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினில் துவங்கி, நாம் தமிழர் சீமான், அதிமுக ஜெயக்குமார், பாஜக அண்ணாமலை என பலரும் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
இதில், லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், நடிகர் - இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட TR வாழ்த்தியுள்ளது கவனம் பெற்றுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அவர், அரசியல் என்பது ஒரு பொது வழி, இதில் யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்றார்.
அதில் எந்த தவறும் இல்லை என்று கூறி, இந்த சூழ்நிலையில் விஜய் அரசியல் நுழைவு குறித்து "பண்ண விரும்பவில்லை விமர்சனம், நாட்டு மக்களுக்கு எப்படியாவது வேண்டும் ஒரு விமோசனம்" என்று கூறி தனது ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்தார்.