ஜோர்டான் துறைமுகத்தில் விஷவாயு கசிந்து 10 பேர் மரணம் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video
By Nandhini Jun 29, 2022 06:42 AM GMT
Report

விஷ வாயு கசிவு 

நேற்று ஜோர்டானின் தெற்கு துறைமுக நகரம் அகாபாத்தில் ஒரு பயங்கரம் நிகழ்ச்சி நடந்தது. விஷ வாயு நிரப்பப்பட்ட தொட்டி கொண்டு செல்லும் போது எதிர்பாராத விதமாக விழுந்தது.

இதிலிருந்து வெளியான விஷ வாயு கசிவில் மொத்தம் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 251 பேருக்கு மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தையடுத்து அந்த பகுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

Toxic gas leak

வைரலாகும் வீடியோ 

தற்போது சமூகவலைத்தளங்களில் வாயு கசிவு குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,

ஒரு பெரிய உருளை போன்ற ஒன்று கிரேனிலிருந்து கீழே விழுந்து கப்பல் ஒன்றின் மேல்தளத்தில் மோதுகிறது. அதைத் தொடர்ந்து மஞ்சள் நிற வாயு புகை மண்டலமாக வெளியேறுகிற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ -